இந்தி தயாரிப்பு!

"லியோ' பட ரிலீஸுக்காக காத் திருக்கும் லோகேஷ் கனகராஜ், அதன் ப்ரோமோஷன் களில் தீவிரமாக இருக்கிறார். இதையடுத்து ரஜினியின் புது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து பிசியாக இருக்கும் லோகேஷ், தயாரிப்பாளராகவும் களமிறங்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. முதல் படமாக, அவரது நெருங்கிய நண்பரும் இயக்குநருமான ரத்னகுமார், ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து ஹாரர் ஜானரில் உருவாக்கும் படத்தை தயாரிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நயன்தாரா கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகியுள்ளாராம். லோகேஷ் தயாரிக்கும் முதல் படம் எனச் சொல்லப்பட்ட இந்த படம், கதாநாயகி பிரச்சனையால் இழுபறியில் இருக்கும் சூழலில் இந்தியில் ஒரு படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் லோகேஷ். "இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மூன்று ஹீரோக்களை உள்ளடக்கிய ஒரு படமாக இருக்கும்' என திரை வட்டாரம் தெரிவிக்கின்றது.

Advertisment

cc

ரசிக விருப்பம்!

விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்ட அமலாபால், கடைசியாக "கடாவர்' படத்தில் நடித்திருந்தார். முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பெரிதளவு பேசப்படவில்லை. இதையடுத்து எந்த தமிழ் படங்களிலும் கமிட்டாகாமல் இருந்த அமலாபால், அவரது தாய்மொழியான மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அங்கு பிரித்விராஜின் "ஆடுஜீவிதம்' மற்றும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைத் தளங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப் படுத்தும் அமலாபால், தமிழ் படங்களில் நடித்து மகிழ்விக்கலாமே என கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அமலாபால் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டபுள் ஹேப்பி!

"ஜெயிலர்' வெற்றியைத் தொடர்ந்து தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. கேரளா -திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதி களில் முடித்துவிட்டு சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். அதோடு அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையில் படமாக்க பிளான் போட்டுள்ளனர். இப்படி தொடர்ந்து பல்வேறு பகுதி களில் படப்பிடிப்பை நடத்தி 4 மாதங்களுக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிட முயற்சித்து வருகின்ற னர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ள "லால் சலாம்' படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே ஆண்டில் ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் சூழலில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தெலுங்கு என்ட்ரி!

ஜீவா நடிப்பில் இந்தாண்டு இதுவரை ஒரு படம் கூட வெளியாக வில்லை. இப்போது பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் பா.விஜய் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் அர்ஜுன் வலுவான கதா பாத்திரத்தில் நடிக்க, ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறாராம். இப்படத்தை முடித்துவிட்டு ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஒரு படம் கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் தற்போது நேரடி படம் ஒன்றில் அறிமுகமாகிறார் ஜீவா. ஆந்திர மாநில தற்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதற்கு முன்னதாக அவரது தந்தையும் மறைந்த ஆந்திர முதலமைச்சருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பயோலிபிக் "யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019ல் வெளியானது. அதில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் "யாத்ரா 2' என்ற தலைப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் பயோலிபிக் உருவாகிறது. ஜெகன்மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். மம்மூட்டியும் இதில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஜீவா, இதுவரை தெலுங்கில் ஆர்யாவின் "சைஸ் ஜீரோ' (தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற தலைப்பில் வெளியானது) மற்றும் வெங்கட் பிரபுவின் "கஸ்டடி' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிதாசன் ஜெ.